அன்னதான திட்டம்
1 . இத்திருகோயிலின் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு உபயம் வழங்குவோர் ரூ. 1200 /- செலுத்தி அலுவலகத்தில் ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும் கட்டளை முதலீடாக ரூ. 18000 /- அன்னதானத்திட்ட நிதியில் செலுத்தி அதன் வட்டியில் பிறந்தநாள், திருமணநாள் அல்லது கட்டளைதாரர் விரும்பும் விசேட நாளில் அன்றைய தினம் அன்னதானம் செய்யலாம். இவைகட்கான உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
2 . அன்னதானம் செய்ய விரும்புவோர் திருக்கோயில் சீட்டு விற்பனைக் கூடத்தில் தங்களால் இயன்ற குறைந்த பட்ச காணிக்கையினை செலுத்தி அன்னதான நன்கொடை ரசீது பெற்றுக் கொள்ளலாம். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி மூ.மு.எண் 53727 /04 எச்.3 நாள் 18.08.2004 ன் படி அன்னதான நன்கொடை சீட்டுகள் ரூ. 5 ,10 ,25 ,50 ,100, 500 ,1000 ஆகிய ஏழு இனங்களில் அச்சிடப்பெற்று நன்கொடைகள் வசூலாகி வரப் பெறுகின்றது.
அன்னதானத்திட்டத்திற்கு உபயம் வழங்குவதற்கு 80G (2 ) (a ) (V ) C . No : 6162E (123 ) CIT - 1 / Try / 2002 - 2003 -ன்படி வருமானவரி விதிவிலக்கு உண்டு.
மனநல மறுவாழ்வு மையம்
இம்மையத்தில் பாரம்பரிய வழிபாட்டு முறையுடன் மனநல மருத்துவ சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களிலேயே முதன்முதலாக அரசு அனுமதியுடன் செயல்படும் மனநல மறுவாழ்வு மையம் இதுவேயாகும்.
மனநலம் மறுவாழ்வு மையத்தில் உள்ளிருப்போர் (மனநலம் பாதிக்கப்பட்டோர் ) சேர்ப்பதற்கான விதிமுறைகள் விபரம்:
1. மனநல மறுவாழ்வு மையத்தில் சேர விரும்புவோர் கீழ்க்காணும் சான்றிதழ்களுடன் நேரில் வந்து, விண்ணப்பப்படிவம் திருக்கோயிலின் அலுவலத்தில் பெற்று பூர்த்தி செய்து சான்றிதழ்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். 1 .தனது இருப்பிட சான்றிதழ் (natively certificate ) கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்.
2 . மனநல மருத்துவர் சான்றிதழ் - யாரேனும் ஒரு மனநல மருத்துவரிடம் பெறலாம்.
3. மேற்படி மையத்தில் சேரவிரும்புவோருடன் அவருக்கு துணையாக அவரின் உறவினர் அல்லது நெருங்கிய குடும்ப நண்பர் கட்டாயம் மையத்தில் தங்கவேண்டும், துணை யாருமில்லாமல் கட்டாயம் உள்ளிருப்போரை சேர்க்க இயலாது.
4. மனநல மறுவாழ்வு மையத்தில் உள்ளிருப்போர், துணையிருப்போர் இருவரைத் தவிர மற்ற யாரையும் எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டர்கள்.
5. மனநல மறுவாழ்வு மையத்தில் தங்குவோரின் உடை மற்றும் உணவு வசதிகள் அவரவர்களின் சொந்தப் பொறுப்பே ஆகும். திருக்கோயில் நிர்வாகம் எக்காரணத்தாலும் பொறுப்பேற்காது.
6. மனநல மறுவாழ்வு மையத்தில் உள்ளிருப்போர், தெய்வாதீனமாக காயமடைதல் போன்ற எந்த அசாதாரண நிகழ்ச்சி ஏற்பட்டாலோ, தப்பி ஓடி விட்டாலோ, எதிர்பாரா இயற்கை மரணம் ஏற்பட்டாலோ திருக்கோயில் நிர்வாகம் பொறுப்பேற்காது.
7. மேற்படி மையத்தில் உள்ளிருப்போர்களை அன்றாடம் காலை, மாலை குளியல் செய்விக்க காவேரி ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐந்துகால பூஜைக்கும் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
8. மேற்படி மையத்தில் சேர்ந்துள்ளவர்கள் அன்றாடம் திருக்கோயிலில் நடைபெறும் ஜபயோகத்திட்டத்தில் தவறாமல் சேர்ந்து பயன் பெறவேண்டும்.
9. மனநல மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தோர், உடனிருப்போர், சமூகப் பணியாளர் மற்றும் மனநல மருத்துவரின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி நடக்க வேண்டும்.
10. மனநல மறுவாழ்வு மையத்தில் உள்ள கழிவறை, குளியலறை, சமையலறை வசதிகளை நல்லமுறையில், பாதுகாப்பாக துணையிருப்போர் வைத்துக் கொள்ள வேண்டும்.
11. மேற்படி மையத்தில் உள்ளிருப்போரை சுத்தமாகவும், சுகாதார முறையிலும் வைத்துக் கொள்வதோடு துணையிருப்போரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
12. மேற்படி மையத்தில் உள்ளிருப்போர், துணையிருப்போர் விரதம் போல் அன்றாடம் இருந்து; தெய்வ வழிபாட்டினையும் தவறாமல் மேற்கொண்டால் சாலச்சிறந்ததாக இருக்கும்.
13. மேற்படி மையத்தில் செலுத்தப்படும் கட்டண விதிகளில் யாருக்கும் எந்தவித பாகுபாடும் செய்ய இயலாது.
14. இதர விதிகள், நிபந்தனைகள் அலுவலகத்தில் கேட்டு அறியலாம்.